முதல் மொழிபெயர்ப்பு
Thread poster: Sundar Gopalakrishnan
Sundar Gopalakrishnan
India
Local time: 20:21
English to Tamil
+ ...
May 18, 2008

பொதுவாக வாழ்க்கையில் முதல் காதல், முதல் வேலை, முதல் சம்பளம் போன்றவை மறக்க முடியாத விஷயங்கள். அதேபோல முதன்முதலாக மொழிபெயர்த்தது என்ன என்பதும் நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம்.

பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் ஆங்கிலம் இரண்டாவது தாளில் மொழிபெயர்ப்பு தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது. எனினும், ஆசிரியர்கள் மொழிபெயர்ப்பது எப்படி என்று எங்களுக்கு எப்போதும் கற்பித்ததில்லை. நாம்தான் மொழியைக் கற்பிக்கிறோமே, அதுவே போதுமானது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். தேர்வின் ஒரு பகுதியாக மொழிபெயர்ப்பு செய்திருந்தாலும் அதை முதல் மொழிபெயர்ப்பாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அதில் நம் விருப்பம் சம்பந்தப்படவில்லை.

பிளஸ் ஒன் படிக்கும்போது ஆங்கிலப் பாடத்தில் வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் 'தி சாலிட்டரி ரீப்பர்' கவிதை இருந்தது. ஒரு நாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் அக்கவிதையை நான் தமிழில் மொழிபெயர்த்தேன். நிறைவாகவும் பெருமிதமாகவும் இருந்தது. அதுதான் என் முதல் மொழிபெயர்ப்பு. பிறகு எவ்வளவோ மொழிபெயர்ப்புகள் செய்திருந்தாலும் முதல் மொழிபெயர்ப்பு செய்தபோது ஏற்பட்ட நிறைவு அவற்றில் ஏற்படவில்லை.

தங்களது முதல் மொழிபெயர்ப்பு பற்றிப் பகிர்ந்துகொள்ளும்படி சக மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


Direct link Reply with quote
 


There is no moderator assigned specifically to this forum.
To report site rules violations or get help, please contact site staff »


முதல் மொழிபெயர்ப்பு

Advanced searchPerfectIt consistency checker
Faster Checking, Greater Accuracy

PerfectIt helps deliver error-free documents. It improves consistency, ensures quality and helps to enforce style guides. It’s a powerful tool for pro users, and comes with the assurance of a 30-day money back guarantee.

More info »
LSP.expert
You’re a freelance translator? LSP.expert helps you manage your daily translation jobs. It’s easy, fast and secure.

How about you start tracking translation jobs and sending invoices in minutes? You can also manage your clients and generate reports about your business activities. So you always keep a clear view on your planning, AND you get a free 30 day trial period!

More info »All of ProZ.com
  • All of ProZ.com
  • Term search
  • Jobs