09:27 Mar 7, 2011
“Body Copy“ என்பதற்கு உரிய பதத்திற்கு வாசகர்கள் வழங்கியுள்ள “கருப்பொருள்“, “பிரதானப் பொருள்“ “தொகுதி உரை“ “அடக்க உரை“ ஆகிய அனைத்தும் (Proz பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வரிசைப்படி) மிகவும் பொருத்தனமானவையே. இவை யாவும் என்னுடைய “முக்கிய உரை“ என்ற பதத்தைக் காட்டிலும் மிகவும் சிறப்பாக உள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 24 மணிநேரத்திற்கு மேல் ஆகின்றபடியினால் இத்துடன் இதனை நிறைவு செய்வது நலம் என கருதுகிறேன். பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துகள்.
எல்லோருடைய கருத்துகளையும் கலந்து அவியலாக்கினால் “Body Copy“ என்பதற்கு “கரு உரை“ (கருவுரை) என்ற சொல் சற்றுப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
கரு { பிரதானம் (தோழி வித்யா)→முக்கியம் (ஆலிரத்)→கரு (தோழி சரசா ஜெயராமன்) } + உரை (தோழர் பாண்டியன், ஆலிரத்) = கருவுரை (கரு + உரை)
இந்த விடை (கருவுரை), கூட்டணி ஆட்சியில் பிரதமரின் உரையைப் போல இடது, வலது, மேலே, கீழே என எல்லா பக்கமும் தலையை ஆட்டுவது போல, எல்லா கட்சிக்காரர்களையும் சமாதானப்படுத்துவது போல இருக்கலாம். இருக்கலாம் என்ன, அதுதான் அப்பட்டமான உண்மை.
(குறிப்பு : இது ஒரு “விபரீதமான சோதனை“ என்று இல்லாமல் “விளையாட்டான முயற்சி“ என்ற அளவில் மதிப்பிடுமாறு கோருகிறேன்).
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி. வணக்கம். |