ProZ.com global directory of translation services
 The translation workplace
Ideas
KudoZ home » English to Tamil » Religion

What is World Interfaith Harmony Week in Tamil?

Tamil translation: உலகின் சமயங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கிடையிலான நல்லிணக்க வாரம்


Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs
(or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.
GLOSSARY ENTRY (DERIVED FROM QUESTION BELOW)
English term or phrase:What is World Interfaith Harmony Week in Tamil?
Tamil translation:உலகின் சமயங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கிடையிலான நல்லிணக்க வாரம்
Entered by: christianboy
Options:
- Contribute to this entry
- Include in personal glossary

09:16 Mar 1, 2011
English to Tamil translations [Non-PRO]
Religion / Christianity
English term or phrase: What is World Interfaith Harmony Week in Tamil?
http://worldinterfaithharmonyweek.com/
christianboy
உலகின் சமயங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கிடையிலான நல்லிணக்க வாரம்
Explanation:
Translation is direct. It refers to "World inter-religious and inter-faith harmony week".

--------------------------------------------------
Note added at 21 mins (2011-03-01 09:37:50 GMT)
--------------------------------------------------

According to http://en.wikipedia.org/wiki/Interfaith_dialog, the term interfaith or interfaith dialog refers to cooperative and positive interaction between people of different religious traditions (i.e., "faiths") and spiritual or humanistic beliefs, at both the individual and institutional level with the aim of deriving a common ground in belief through a concentration on similarities between faiths, understanding of values, and commitment to the world.
Selected response from:

K.S. PANDIAN
India
Local time: 05:39
Grading comment
Thanks! Your answer is very close to the one I just found in the Internet (சமயங்களுக்கு இடையிலான உலக ஒற்றுமை வாரத்தை).



Summary of answers provided
5 +3உலகின் சமயங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கிடையிலான நல்லிணக்க வாரம்
K.S. PANDIAN
5 +2உலக மத நல்லிணக்க வாரம்
sundararaj suresh
5 -1உலக இறை நம்பிக்கையாளர்கள் நல்லிணக்க வாரம்
AR Ashok kumar
5 -1உலக நம்பிக்கைப் பகிர்வு நல்லிணக்க வாரம்
Ragland Inbaraj


Discussion entries: 1





  

Answers


18 mins   confidence: Answerer confidence 5/5 peer agreement (net): +2
what is world interfaith harmony week in tamil?
உலக மத நல்லிணக்க வாரம்


Explanation:
interfaith - Involving persons of different religious faiths

www.wordweb.com

sundararaj suresh
India
Local time: 05:39
Native speaker of: Native in TamilTamil

Peer comments on this answer (and responses from the answerer)
agree  Narendran: This is also nearer to source . But misses the implied plurality in Interfaith I feel. but in general this is also ok.
1 day4 hrs
  -> thanks

agree  K.S. PANDIAN: Plural sense is implicit here. So this is not an issue. This answer too correctly conveys the meaning.
1 day5 hrs
  -> thanks
Login to enter a peer comment (or grade)

15 mins   confidence: Answerer confidence 5/5 peer agreement (net): +3
what is world interfaith harmony week in tamil?
உலகின் சமயங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கிடையிலான நல்லிணக்க வாரம்


Explanation:
Translation is direct. It refers to "World inter-religious and inter-faith harmony week".

--------------------------------------------------
Note added at 21 mins (2011-03-01 09:37:50 GMT)
--------------------------------------------------

According to http://en.wikipedia.org/wiki/Interfaith_dialog, the term interfaith or interfaith dialog refers to cooperative and positive interaction between people of different religious traditions (i.e., "faiths") and spiritual or humanistic beliefs, at both the individual and institutional level with the aim of deriving a common ground in belief through a concentration on similarities between faiths, understanding of values, and commitment to the world.

K.S. PANDIAN
India
Local time: 05:39
Works in field
Native speaker of: Native in TamilTamil
Grading comment
Thanks! Your answer is very close to the one I just found in the Internet (சமயங்களுக்கு இடையிலான உலக ஒற்றுமை வாரத்தை).

Peer comments on this answer (and responses from the answerer)
agree  Siddarthan: I agree with this reply. Faith refers to religious as well as humanistic beliefs. Hence the translation, "உலக சமயங்களுக்கிடையிலான நல்லிணக்க வாரம்" would not give the complete meaning of the source. "நம்பிக்கைகள்" also is needed.
20 hrs

agree  Narendran: This attempt it more nearer to source.I suggest the elimination of the additions in the translation and the following is enough உலக சமயங்களுக்கிடையிலான நல்லிணக்க வாரம்or உலக சமயங்கள் நல்லிணக்க வாரம். the word Inter faith is directly linked with religion
1 day4 hrs

agree  AR Ashok kumar: உங்களின் விடை வெற்றிபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.. மேலும் பல வெற்றி மகுடங்கள் உங்களை அலங்கரிக்க மனமார வாழ்த்துகிறேன்..இது உங்கள் அனுபவத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த மற்றுமொரு பரிசு. தமிழினத்திற்கு உங்கள் பணி தொடர்ந்து தேவை. நன்றி.
2 days17 hrs
  -> நன்றி, திரு அசோக் குமார், வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
Login to enter a peer comment (or grade)

10 mins   confidence: Answerer confidence 5/5 peer agreement (net): -1
what is world interfaith harmony week in tamil?
உலக நம்பிக்கைப் பகிர்வு நல்லிணக்க வாரம்


Explanation:
World is given with the standard word
Interfaith - is translated as faith-sharing (Hope sharing), because if inter is directly translated in Tamil, it wont reflect the correct meaning and may be like a technical term
harmony - is translated with the general usage


--------------------------------------------------
Note added at 1 day7 hrs (2011-03-02 16:27:32 GMT)
--------------------------------------------------

I dont how you say its a machine translation. Why dont Interfaith be also said like Faith Sharing, where relationship is shared among religions. When we say Inter-national, dont we feel something is shared among nations, and also the same in 'Internet' too. Please dont blindly justify everything as machine translation.

--------------------------------------------------
Note added at 1 day7 hrs (2011-03-02 16:31:17 GMT)
--------------------------------------------------

To make more clear let me suggest : "உலக சமயநம்பிக்கைப் பகிர்வு நல்லிணக்க வாரம்"

Example sentence(s):
  • நாங்கள் ஒருவருக்கொருவர் நல்லிணக்கம் பாராட்ட உலக நம்பிக்கைப்பகிர்வு நல்லிணக்க வாரத்தைக் கொண

    Reference: http://ta.wiktionary.org/wiki/faith
    Reference: http://ta.wiktionary.org/wiki/harmony
Ragland Inbaraj
India
Local time: 05:39
Specializes in field
Native speaker of: Native in TamilTamil
PRO pts in category: 4

Peer comments on this answer (and responses from the answerer)
disagree  Narendran: The translator miserably missed the essence of the source. This is an ideal example for what one may get if MACHINE is allowed to do the work blindly.I dont know whether he used such a facility.
1 day4 hrs
Login to enter a peer comment (or grade)

3 hrs   confidence: Answerer confidence 5/5 peer agreement (net): -1
what is world interfaith harmony week in tamil?
உலக இறை நம்பிக்கையாளர்கள் நல்லிணக்க வாரம்


Explanation:
''inter faith'' means involving people who belong to different religions. As the term refers to the activity of the PEOPLE who are the believers of any GOD, i think for ''world interfaith harmony week'', ''இறை நம்பிக்கையாளர்கள் நல்லிணக்க வாரம்'' term will be a better choice. Comments are welcome with red carpet. Thank You.

--------------------------------------------------
Note added at 1 day5 hrs (2011-03-02 15:10:16 GMT)
--------------------------------------------------

Mr.Narendran, i have not mixed ''ideology'' with ''followers''. Whenever a new thing is introduced, u have to take it & make it understand to the common layman. My attempt is towards that. Thanks for ur comments.

--------------------------------------------------
Note added at 1 day8 hrs (2011-03-02 17:16:39 GMT)
--------------------------------------------------


மதங்களின் தத்துவங்களை அல்லது நம்பிக்கைகளை, நல்லிணக்கப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்கிற ஒரு தேவை எழுகிறது.
இதன்மூலம் என்ன தெரிகிறது. ஏன்? என் சிற்றறிவுக்கு எட்டியதை நான் சிந்தித்துப் பார்த்தேன்

1) அவற்றுக்கு இடையே வேறுபாடுகள் களையப்படவேண்டி இருக்கிறது என்பதாலா?

(அல்லது / மற்றும்)

அவற்றுக்கு இடையே களையப்படவேண்டிய வேறுபாடுகள் இருக்கிறது என்பதாலா?


வேறுபாடு இருப்பதால்தானே வேறு வேறு மதமாக இருக்கிறது!
இல்லாவிடில் ஒரு மதம் மட்டுமே அல்லவா உலகில் இருக்கவேண்டும். இந்த World Interfaith Harmony Week (Hereinafter WIHW)
நோக்கம் என்னவாக இருக்க முடியும்? உலகில் உள்ள மதங்கள், சமயங்கள், மத நம்பிக்கை சடங்குகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை எல்லாம் களைந்து, நல்லிணப்படுத்தி “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதுபோல “ஒன்றே உலகம் ஒன்றே நம்பிக்கை” என்ற தத்துவத்திற்கு வலு சேர்ப்பது அதனுடைய நோக்கமாக இருக்குமா?

இருக்கலாம் என்றே வைத்துக்கொள்வோமே!
அதாவது வேறுபாடுகளை களைய முயற்சிப்பதற்காக இந்த WIHW வாரம் கொண்டாடப்படுகிறதா?

(அல்லது / மற்றும்)

களையப்படவேண்டிய வேறுபாடுகளை கண்டுபிடிப்பதற்காக இந்த WIHW வாரம் கொண்டாடப்படுகிறதா?


சுருக்கமாக = “ஒன்றே உலகம் ஒன்றே நம்பிக்கை” க்கு வலு சேர்ப்பது


2) ஒவ்வொரு மதத்திற்கும், சமயத்திற்கும், மத சடங்குக்கும் ஒரு தத்துவம் + தனித்துவம் இருக்கிறது. பிறகு ஏன் நல்லிணக்கம் வேண்டும்?

அவரவர் போக்கிலே அப்படியே விட்டுவிடலாமே!
விட்டுவிடலாம்..ஆனால்..விட்டால் பிறகு பிடிக்கக்கூடிய விசயம் அல்ல இது..மதங்களை உருவாக்கி பல ஆயிரம் ஆண்டுகள் மனிதர்களை அப்படியே அவனவன் போக்கில் விட்டுவிட்டதால்..ஏற்பட்ட விளைவு?..,இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் இருக்கவேண்டிய மனித இனம் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் சமாதி ஆகிவிடும் அச்சம் நிலவுகிறது..
இனியும் இப்படியே பக்தர்களை, அதிலும் தீவிர பக்தர்களை இப்படியே விட்டுவிட்டால்..ஏற்படக்கூடிய விளைவு?..,எதிர்காலத்தில், அவரவர் தாங்கிப் பிடிக்கும் மதங்களின் கொடிகள் திக்கெட்டும் காற்றில் பறக்கும்..ஆனால் அதனை தாங்கிக்கொண்டிருக்கும் கொடிக் கம்பங்கள் எல்லாம் மனிதனின் கல்லறைகளுக்கு மேல் இருக்கும்..

இதனை இப்படியே விடக்கூடாது..விட்டால் மதங்களை உருவாக்கிய மனிதன் அந்த மதங்களாலேயே அழிந்துவிடவும் வாய்ப்புள்ளது?!..
மதங்களை தாங்கிப்பிடிப்பதற்காக, உன் மதம் உயர்ந்ததா? அல்லது என் மதம் உயர்ந்ததா? என்ற போட்டியில் மனிதம் மரித்துவிட வாய்ப்புள்ளது?!..
எனவே உடனடியாக நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்கிற காலத்தின் கட்டாயத்தினாலா?

இருக்கலாம் என்றே வைத்துக்கொள்வோமே!

அதாவது தீவிர பக்தர்களால் உலகம் தீப்பிடிப்பதை தடுக்கும் முயற்சியாக இந்த WIHW வாரம் கொண்டாடப்படுகிறதா?

(அல்லது / மற்றும்)

மதங்களுக்காக மனிதன் (மனிதம்) அழியாமல் காக்கும் முயற்சியாக இந்த WIHW வாரம் கொண்டாடப்படுகிறதா?

சுருக்கமாக = “தீவிரவாதத்தை ஒடுக்கி மனிதத்தை காக்கும் முயற்சி” க்கு வலு சேர்ப்பது

எதற்கு உருவாக்கினார்களோ யாருக்குத் தெரியும்?
தன்னை யாராவது காப்பாற்றமாட்டார்களா என ஏங்கித் தவிக்கும் ஆண்டவனுக்கும், தன்னுடைய ஆண்டவனைக் காப்பாற்ற நினைக்கும் பக்தர்களுக்கும், பொதுவாக எல்லா பக்தர்களையும் காக்க நினைக்கும் ஐ.நா.சபைக்கும் தான் வெளிச்சம்!

இன்னும் எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம், மறுப்புத் தெரிவிப்பவர்களும் சளைக்காமல் பட்டிமன்றம் நடத்தலாம். சொல்லுக்கு சொல் பொருள் குற்றம் காணலாம்..சொல்லுக்குள் ஆழமாக சென்று பொருள் முத்தை தேடிக் கண்டுபிடித்து காட்சிக்கு வைக்கலாம்..வியாபாரம் சூடு பிடிக்க எதையாவது செய்ய வேண்டுமே என்று நினைப்பவர்கள் தூக்கத்தை தொலைத்து சிந்தித்து சேற்றை வாரி தூற்றலாம்..காண்பவர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கலாம்..குளிர் காய்பவர்களுக்கு குதூகலமாக இருக்கலாம்..

அல்லது மதமே வேண்டாம் அதனால்தான் பிரச்சினை என்று “மதங்களை மறக்கும் வாரம்” “மதங்கள் மற்றும் சமயங்களை துறக்கும் வாரம்” “மதங்களை வெறுக்கும் வாரம்” “நம்பிக்கைகளுக்கு இடையிலான விரதம் வாரம்” “மதவாதிகள் வாரம்” “நாத்திகர்கள் வாரம்” என தொலைக்காட்சி விளம்பர வாரங்கள் புதிது புதிதாக முளைக்கலாம்!


ஒரு நல்ல நோக்கத்திற்காக பொய் கூட சொல்லலாம்..அது தவறில்லை - முப்பாட்டர் வள்ளுவர் வாக்கு.

ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு வாரம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றால் என்னைப் பொறுத்தவரை சாதாரண ஒரு மனிதனை எந்த விதத்தில் வெற்றிகரமாக அதன் நோக்கம் சிதையாமல் கொண்டு சேர்க்க முடியும் என பார்ப்பதுதான் என்னுடைய பாணி. சில பேர் சோற்றை குழம்பு, கறியுடன் வாழை இலையில் தான் சத்துணவினை வழங்க வேண்டும்..அதுதான் முறை என வாதிடுவார்கள்..

என் பாணியோ..நோயாளியும் பருகக் கூடிய வகையில் முதலில் கஞ்சி சோற்றை வழங்குங்கள்..பிறகு பிரியாணி போடுங்கள் என்தாகும்..

மதங்கள்..சமயங்கள்..நம்பிக்கைகள்..ஆகியவற்றுக்கு இடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டியது முக்கியம்..

ஆனால் அதற்கு முன்னர்,

“இறை நம்பிக்கையாளர்கள் மனங்களுக்கு இடையே நல்லிணக்கம்“ ஏற்படுத்தப்பட வேண்டியது மிக மிக முக்கியம்..

வாசகர்களின் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன..

சூடாக இருந்தாலும்..சுகமாக இருந்தாலும்..

வழக்கம்போல் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்க தயாராக இருக்கிறேன்..

வணக்கம்.


AR Ashok kumar
India
Local time: 05:39
Native speaker of: Native in TamilTamil

Peer comments on this answer (and responses from the answerer)
disagree  Narendran: Here I think he has gone for the followers than the ideology. This is the week celebrated by the faithfuls of different IDEALOGIES ie religions/ sects.He mixed up meeting of ideologies as meeting of individuals who follow them which is not the source.
1 day2 hrs
Login to enter a peer comment (or grade)




Return to KudoZ list


KudoZ™ translation help
The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.



See also: