roaming and “சுற்றி திரிதல்” 18:56 Dec 7, 2009
இத்தனை விளக்கம் அளித்த நண்பர் தனது “சுற்றித் திரிதலுக்கு” விளக்கம் அளிக்கவில்லை. இம்மொழிபெயர்ப்பைக் கேட்டால் சிறு பிள்ளை கூட சிரித்து விடும்
உதாரணமாக எனது அலைபேசி சேவையில் சுற்றி திரிதல் வசதி உள்ளது எனக் கூறினால் சிறுபிள்ளை கூட சிரித்துவிடும்
Roaming என்பதற்கு “சுற்றி திரிதல்” என்ற மொழிபெயர்ப்பு –தமிழுக்கு ஏற்பட்ட சோதனை. Roaming எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை அறியாமல் மொழிபெயர்க்கும் நண்பர். My friend expired last month என்பதை “எனது நண்பர் கடந்த மாதம் காலாவதியாகிவிட்டார்” என்று மொழிபெயர்ப்பாரா???????????. சூழ்நிலை அறிந்து மொழி பெயர்ப்பதே தமிழுக்கு அழகு. |