தமிழ் மொழிபெயர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்!
Thread poster: snagarajan

snagarajan
Local time: 02:23
English to Tamil
Apr 11, 2008

சித்திரைப் புத்தாண்டு நன்னாளில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் முன் ஒரு நல்ல சிந்தனையை வைக்க முற்படுகிறேன்.
ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலிருந்தும் பல்வேறுபட்ட படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்ப்பது ஒரு நல்ல பணி; கஷ்டமான பணி; தமிழை உயரத்தில் ஏற்றும் உன்னத பணி!
மொழிபெயர்ப்பில் பல்வேறு வகையினர் உள்ளனர்.
இலக்கிய நூல்களையும் கவிதைகளையும் மொழி பெயர்ப்பவர்கள் ஒரு சாரார்.
அறிவியல் மற்றும் சட்டம் போன்ற பொருள்களில் கலைச் சொல்லாக்கத்துடன் மொழிபெயர்ப்பவர்கள் இன்னொரு சாரார்;
அன்றாட கடிதங்கள், தகவல் தொடர்புகள் உள்ளிட்ட ஆவணங்களை மொழி பெயர்ப்பவர் சிலர்.
நிறுவனங்களின் செய்தி அறிக்கைகள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பர நிறுவனங்களின் கவர்ச்சி சொற்றொடர்களை மொழிபெயர்ப்பவர் சிலர்.
அன்றாட தமிழ் நாளிதழ்களுக்கு ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் நிமிடத்திற்கு நிமிடம் தரும் செய்திகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் பத்திரிக்கையாளர் பலர்.
திரைப்படங்களில் வேற்று மொழிப் படங்களைத் தழிழுக்கு மாற்றுவதற்காக ஒலி நேரத்தையும் வசனத்தையும் கருத்தில் கொண்டு மொழி பெயர்ப்பவர் சிலர்.
ஊடகங்களுக்கான செய்திகளை வேற்று மொழிகளிலிருந்து (பெரும்பாலும் ஆங்கிலம் தான்) மொழிபெயர்ப்பவர்கள் பலர்.
அயல் நாட்டு நிறுவனங்களிலிருந்து வருவோருக்கு தமிழ்நாட்டில் தமிழில் கருத்துக்களை மொழிபெயர்த்துக் கூறுவோர் பலர்.
நிறுவன ஒப்பந்தங்கள், மக்கள் சபை, மாநிலங்களின் சட்டசபை பேச்சுக்கள் அரசு ஆணைகளை மொழிபெயர்ப்பவர்கள் பலர்.
இப்படி ஏராளமான மொழிபெயர்ப்பாளர்கள் தனித்தனியே தங்கள் பணிகளைத் திறம்படச் செய்து வருவதால் தான் தமிழ் உலக அரங்கில் தாக்குப் பிடித்து தரம் உயர்ந்து திகழ்கிறது.
இந்தப் பணியில் இன்னல்கள் பல. இவற்றை தங்களுக்குள் பரிமாறி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு ஒருவர் மொழிபெயர்த்த சொற்களையே இன்னொருவர் ஆராயாமல் அனைத்துச் சொற்களும் அனைவருக்கும் என்ற பாணியில் தமிழைப் புதிய சொற்களுடன் அனைவருக்கும் கொண்டு செல்லும் பெரிய கடப்பாடு மொழிபெயர்ப்பாளர்களுக்கு உண்டு.
இதற்கு ஒரு தளம் வேண்டாமா? அரசியல் சார்பற்ற உலகத்தில் எங்கிருந்தாலும் தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்யும் அனைவரும் இதில் இணைய ஒரு இணையதளம் தேவை எனில் அது ஏன் www.proz.com ஆக இருக்கக் கூடாது.
ஓரிழையில் அனைவரும் இதில் இணைந்தால் பல நல்ல காரியங்களை ஆற்ற முடியும்.
சித்திரைப் புத்தாண்டு தொடங்கும் புதிய நன்னாளில் ஏற்றம் தரும் இந்த சிந்தனையைச் சிந்திக்க வேண்டுகிறேன்.
இதற்கென ஒரு குழு அமைந்தால் அதுவே இந்தப் பெரும் பணியின் ஆரம்ப கட்டமாக அமையும்.
சிந்திப்போமா, செயல்படுவோமா?
அன்புடன்
ச. நாகராஜன்


 

ARIYANACHI
India
Local time: 02:23
English to Tamil
+ ...
நன்றி Jan 31, 2014

அன்பு நண்பருக்கு,
வருடம் பல கடந்தாலும் இந்த முயற்சியில் பங்குகொள்ள என் விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
கணேசன்


 


There is no moderator assigned specifically to this forum.
To report site rules violations or get help, please contact site staff »


தமிழ் மொழிபெயர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்!

Advanced searchPerfectIt consistency checker
Faster Checking, Greater Accuracy

PerfectIt helps deliver error-free documents. It improves consistency, ensures quality and helps to enforce style guides. It’s a powerful tool for pro users, and comes with the assurance of a 30-day money back guarantee.

More info »
Anycount & Translation Office 3000
Translation Office 3000

Translation Office 3000 is an advanced accounting tool for freelance translators and small agencies. TO3000 easily and seamlessly integrates with the business life of professional freelance translators.

More info »Forums
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search