This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
Freelance translator and/or interpreter, Verified site user
Data security
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
Affiliations
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
English to Tamil: 6th ProZ.com Translation Contest - Entry #3616
Source text - English Eroticism has this in common with an addictive drug: that there is a coercive element to its pleasure with which part of us is in complicity, and part not. Thus ever since time began men have been trying to enjoy eroticism without being destroyed by it. Societies, religions can be defined in the way they deal with this conundrum. Polygamy, monogamy with repression, monogamy with affairs, monogamy with prostitutes, serial monogamy. Not to mention individual solutions of great ingenuity, or desperation: Victor Hugo with the door knocked through the wall of his office, to let in a girl each afternoon. Auden's flair for finding call-boys in every town. Picasso who simply refused when wife and mistress demanded he choose between them. Then there is always the hair-shirt of course. But perhaps the thing to remember when you wake up with a life full of fresh paint and tortuous complications is that eroticism wasn't invented for you, nor merely for the survival of the species perhaps, but for a divinity's entertainment. Nothing generates so many opportunities for titillation and schadenfreude as eroticism. Which is why it lies at the centre of so much narrative. How the gods thronged the balconies of heaven to see the consequences of Helen's betrayal! And your friends are watching too. Your antics have put the shine on many a late-night conversation.
On the borders between mythology and history, that wily survivor Odysseus was the first who learnt to trick the gods. And perhaps his smartest trick of all was that of lashing himself to the mast before the Sirens came in earshot. There are those of course who are happy to stand at the railings, even scan the horizon. Otherwise, choose your mast, find the ropes that suit you: sport, workaholism, celibacy with prayerbook and bell... But the kindest and toughest ropes of all are probably to be found in some suburban semi-detached with rowdy children and a woman who never allows the dust to settle for too long.
Translation - Tamil காமத்துக்கும் போதைப் பொருளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு: இரண்டுக்கும் அவை தருகின்ற இன்பத்தோடு லயித்து போகச் செய்யும் தன்மை உண்டு. அதே வேளையில் அவ்வாறு போகவிடாமல் தடுக்கின்ற இயல்பும் அதற்குண்டு. உலகம் உருவாக்கப்பட்ட நாள் முதல் காம உணர்வு தன்னை அழித்துவிடாத வகையில் மனிதன் அதனை அனுபவிக்க முயன்றுக் கொண்டே தான் இருக்கிறான். இந்த விஷயத்தில் அவன் எவ்வாறு நடந்துக் கொள்கிறான் என்பதைப் பொருத்து தான் மதங்களின் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. பல திருமணங்களுடன் கூடிய ஒரு வாழ்க்கை முறை, ஒரே வாழ்க்கைத் துணையுடன் கட்டுப்பாட்டுடன் அமைந்த வாழ்க்கை, ஒரே திருமணம் ஆனால் பல கள்ளத்தொடர்புகள், ஒரு திருமண பந்தத்தில் இருந்துக் கொண்டே பல விலைப்பெண்களுடன் ஒட்டி உறவாடுதல், ஒன்று மாற்றி ஒன்று என தொடர்ந்து பல திருமணங்கள் போன்ற பல விதமான வாழ்க்கை முறைகளுக்கு மட்டும் தான் காம உணர்ச்சி வித்திடுகிறதா? இதோடு நிற்காமல், தனிப்பட்ட மனிதர்களின் புத்திக் கூர்மையினாலும் தீவிர காம வேட்கையினாலும் நிகழும் தொடர்புகள் வேறு உள்ளனவே: விக்டர் ஹூகோ தனது அலுவலகத்தின் சுவரையே இடித்து ஒரு கதவை ஏற்படுத்தியது எதற்கு? தன்னை மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு மதியமும் ஒரு பெண் உள்ளே வரச்செய்ய வேண்டும் என்பதற்கு தானே. ஔடன் என்பவன் தான் செல்கின்ற ஒவ்வொரு நகரிலும் சல்லாபிப்பதற்கு ஓர் ஆண் துணையை தேடிக்கொள்வதில் பேர் போனவன். பிக்காசோ என்ற ஓவியனின் கதை இன்னும் சுவாரசியமாக இருக்கும். அவனது மனைவியும் கள்ளக் காதலியும் அவனுக்கு ஓர் இக்கட்டான சோதனையை வைத்தனர். தங்கள் இருவரில் ஒருத்தியை மட்டுமே அவன் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிடிவாதமாக ஒற்றைக்காலில் நின்றனர். காமத்துக்கு அடிமையான அவன் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அது தன்னால் முடியாது என ஒரேயடியாக மறுத்து விட்டான். சல்லாபிக்கின்ற போது சட்டையில் சிக்குண்ட முடி போன்ற ஆதாரங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்களின் கதை தெரிந்தது தானே. அதிகாலையில் மனதை நெருடும் சிக்கல்களோடு படுக்கையை விட்டு எழுகின்ற போது தாவுகின்ற மனதை அடக்குவது அவசியம். அவ்வேளையிலே காமம் உங்களுக்காக உருவாக்கப்படவில்லை என்பதை மிக முக்கியமாக நினைவில் இருத்திக் கொள்ளவது அவசியம். இவ்வுலகில் உயிர்களின் நீடித்த வாழ்க்கைக்காக உடலுறவு ஏற்படவில்லை. அது உருவானது ஏதோ ஒரு பரம்பொருளின் கேளிக்கைக்காகவே. காமத்தைத் தவிர வேறெதுவும் இந்தளவுக்கு மனிதர்களிடையே மன நெகிழ்ச்சியையும் சுயநலப்போக்கையும் ஏற்படுத்தியதே இல்லை. கள்ளத்தனம் புரிகின்ற பெண்கள் எதிர்நோக்குகின்ற விளைவுகளை தெய்வங்கள் சுவர்க்கத்தின் வாசலில் கூடி நின்றுக் கொண்டு நிச்சயமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருப்பார்கள்! தெய்வங்கள் மட்டும் தானா? உங்களுடைய நண்பர்களும் தான் நீங்கள் செய்வதை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பல இரவுநேர உரையாடல்களுக்கு உங்களுடைய காம லீலைகள் நிச்சயமாக ஓர் அவலாக பலருக்கும் இருக்கும்.
புராணக்கதைகள் மற்றும் சரித்திரத்துக்கு மத்தியில், தெய்வங்களின் இத்தகைய சதித்திட்டத்தை அறிந்துக் கொண்ட ஒடேசியஸ் என்ற கதைமாந்தன் மிகச் சாதுரியமான ஒரு காரியத்தை செய்தான். அவன் காதுக்கெட்டிய தூரத்தில் சங்குச் சத்தம் கேட்பதற்கு முன்பே தன்னை கப்பலின் பாய்மரதோடு கட்டிக்கொண்டு பெண் பிரச்னையிலிருந்து தப்பித்துக்கொண்டான். வேறு சிலராக இருந்தால், கைப்பிடியில் நின்றுக்கொண்டோ அல்லது அடிவானத்தை பார்த்துக்கொண்டோ நின்றுக் கொண்டு மாட்டிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் அனைத்திலும் உஷாராக இருக்க வேண்டும், காம வேட்கையிலிருந்து தப்பிப்பதற்கு உங்களுக்கு கப்பலின் பாய்மரமும் வேண்டும் உங்களுக்கேற்ற கயிறும் வேண்டும்: விளையாட்டு, வேலை, கடவுள் சிந்தனை, கோவில் மணியோசை என வாலை சுருட்டிக்கொண்டிருப்பதே உங்களுக்கு நல்லது ... ஆனாலும் மனதை ஒருநிலைப்படுத்த இவையாவற்றையும் காட்டிலும் மிக வலிமையான ஒன்று இருக்கத் தான் செய்கிறது. அன்புடன் கூடிய இந்தக் கடினமான கயிற்றுக்கு நீங்கள் வேறெங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. புறநகர்ப்பகுதியில் இரட்டை மாடி வீடுகளில் பிடிவாதம் கொண்ட பிள்ளைகளுடன் மாறடித்துக்கொண்டு, வீட்டு வேலையே கதியென அடுப்படியில் அண்டிக்கிடக்கிறார்களே உங்கள் மனைவிமார்கள், அவர்களிடம் போனாலே போதுமானது.
English to Tamil: Second ProZ.com Translation Contest 2007 - Entry #706
Source text - English The floor was of smooth, white stone; the chairs, high-backed, primitive structures, painted green: one or two heavy black ones lurking in the shade. In an arch under the dresser reposed a huge, liver-coloured bitch pointer, surrounded by a swarm of squealing puppies; and other dogs haunted other recesses.
The apartment and furniture would have been nothing extraordinary as belonging to a homely, northern farmer, with a stubborn countenance, and stalwart limbs set out to advantage in knee-breeches and gaiters. Such an individual seated in his armchair, his mug of ale frothing on the round table before him, is to be seen in any circuit of five or six miles among these hills, if you go at the right time after dinner. But Mr. H forms a singular contrast to his abode and style of living. He is a dark-skinned gipsy in aspect, in dress and manners a gentleman: that is, as much a gentleman as many a country squire: rather slovenly, perhaps, yet not looking amiss with his negligence, because he has an erect and handsome figure; and rather morose. Possibly, some people might suspect him of a degree of underbred pride; I have a sympathetic chord within that tells me it is nothing of the sort: I know, by instinct, his reserve springs from an aversion to showy displays of feeling- to manifestations of mutual kindliness. He'll love and hate equally under cover, and esteem it a species of impertinence to be loved or hated again. No, I'm running on too fast: I bestow my own attributes over liberally on him. Mr. H may have entirely dissimilar reasons for keeping his hand out of the way when he meets a would-be-acquaintance, to those which actuate me. Let me hope my constitution is almost peculiar: my dear mother used to say I should never have a comfortable home; and only last summer I proved myself perfectly unworthy of one.
Translation - Tamil அந்தத் தரை வழவழப்பான, வெள்ளைக்கற்களால் ஆனது; அந்த நாற்காலிகள், உயரமான பின்புறம் உடையவை, பழமை வாய்ந்த அமைப்புக்கள், பச்சை வர்ணம் பூசப்பட்டவை: ஒன்று அல்லது இரண்டு நாற்காலிகள் கறுப்பு வர்ணத்தில் நிழலில் மறைந்திருந்தன. அலங்கார மேசைக்கடியில் இருந்த வளைவில் கீச்சிடும் நாய்க்குட்டிகளுடன் பழுப்பு நிறத்தில் ஒரு பெரிய பெண் நாய்; மேலும் மற்ற நாய்கள் வேறு இடங்களில் சூழ்ந்திருந்தன.
இந்த வீடு மற்றும் மரச்சாமான்களுக்கு எந்தவொரு தனிச்சிறப்பும் கிடையாது. வலுவான கால்களை எடுத்துக்காட்டும் முட்டி வரையிலான அரைக்கால் சட்டை, மற்றும் கணுக்கால் வரையிலான பாதுகாப்பு கவசத்தை அணிந்த, பிடிவாத குணங்கொண்ட எளிய வடப்பகுதி விவசாயி ஒருவருக்கு அது சொந்தமானது என்பதைத் தவிர வேறு சிறப்பு இல்லை. இப்படிப்பட்ட ஒரு மனிதர், முன்னே இருக்கின்ற வட்டமான மேசை மீது ஒரு குவளையில் நுரை பொங்கும் மதுவை வைத்துக்கொண்டு தனது கைப்பிடி கொண்ட நாற்காலியில் அமர்ந்திருப்பதை, இரவு உணவுக்குப் பின் சரியான நேரத்தில் நீங்கள் சென்றால், இந்த மலைகளுக்கிடையில் ஐந்து அல்லது ஆறு மைல் சுற்றளவுக்கும் பார்க்கலாம். இருப்பினும், தனது வீட்டுக்கும் வாழ்க்கை முறைக்கும் மாறுபட்ட வகையில் திரு எச் திகழ்கிறார். தோற்றத்தில் அவர் கறுப்புத்தோல் கொண்ட நாடோடி, உடையிலும் பழக்க வழக்கங்களிலும் ஒரு பண்பாளர்: அதாவது, மற்ற நில உரிமையாளர் போன்றே ஒரு பண்பாளர் தான்: ஒழுங்குமுறை இல்லாமல் வேண்டுமானால் ஒருவேளை இருக்கலாம், இருப்பினும் தனது கவனக்குறைவு காரணமாக, ஒழுங்கை மீறுபவராகவும் காட்சியளிப்பதில்லை, ஏனெனில் அவர் ஒரு நேர்த்திமிக்க கவர்ச்சியான உருவத்தைக் கொண்டிருந்தார்; மேலும் சற்று சிடுசிடுப்பும் இருந்தது. ஒருவேளை, சரியான வளர்ப்பின்மை காரணமாக எழுந்த தற்பெருமை கொண்டவராக அவரை சிலர் சந்தேகிக்கலாம்; அவ்வாறு எதுவும் இல்லையென என்னுள் இருக்கின்ற ஏதோ ஒரு பச்சாதாப உணர்வு சொல்கிறது: அவரது தனித்த சுபாவத்துக்குக் காரணமாக இருப்பது தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் உண்டான வெறுப்பு நிலையே - எனவே தான் அவரது அன்பின் வெளிப்பாடுகள். அன்பையும் வெறுப்பையும் அவர் ஒன்றாகக் காட்டுகின்ற அதே வேளையில், தன் மீது அன்பு அல்லது வெறுப்பு மீண்டும் காட்டப்படுவதை பொருத்தமற்ற ஒன்றாக மதிப்பிடுவார்.
இல்லை, நான் மிக விரைவாக சொல்லிக்கொண்டு போகிறேன்: நான் அவருக்கு எனது பண்புகளையே அதிகபட்சமாக வழங்கிக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் திரு. எச் ஒருவரை சந்தித்து பழகுகின்ற வேளையில், அப்பாதையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான காரணங்கள் என்னிடமிருந்து மாறுபட்டிருக்கலாம். எனது எண்ணங்கள் ஏறக்குறைய விசித்திரமானதாக இருப்பதாகவே நான் நம்பிக் கொள்கிறேன்: வசதியான ஓர் இல்லம் எனக்கு இருக்கக்கூடாது என எனது அன்புத் தாய் சொல்லி இருக்கிறார்; அதற்கான அருகதை எனக்கு முற்றிலும் இல்லை என்பதை போன கோடைக்காலத்தில் தான் நிரூபித்திருக்கிறேன்.
English to Tamil: Third ProZ.com Translation Contest - Entry #1146
Source text - English The problem of being awkward with introductions is not, for many, an “unusual situation.” You may find that you are often uncertain about whether to introduce someone using their first name, last name, or both; about whether to use a qualifier (“this is my friend, ______”); even about whether or not it is in fact your responsibility to introduce two people in a given situation. But all of this is small potatoes compared with the seemingly inevitable mingling nightmare of having to introduce someone whose name you have forgotten.
It’s one thing to forget someone’s name if you’ve met them only once or twice, or if you haven’t seen them in a while. But all too often it’s someone whose name you really should know, and who is going to be insulted to find out you don’t. In other words, a faux pas in the making.
This is absolute agony when it happens, and I’ve watched hundreds of minglers try to deal with different ways, ranging from exuberant apology (“Oh GOD, I’m so sorry, JEEZ, wow, I can’t believe I’ve forgotten your name!”) to throwing up their hands and walking away. But there are better ways to deal with this kind of mental slip. Next time you draw a blank while making introductions, try the following ploy:
Force them to introduce themselves. This is the smoothest and most effective way to handle your memory lapse. When it’s done well, no one will ever suspect you. If you have forgotten one person’s name in the group, turn to that person first and smile. Then turn invitingly to a person whose name you do remember and say, “This is Linden Bond,” turning back casually toward the forgotten person. The person whose name you haven’t mentioned yet will automatically (it’s a reflex) say “Nice to meet you, Linden, I’m Sylvia Cooper,” and usually offer a hand to shake.
Translation - Tamil அறிமுகங்களினால் ஏற்படும் தடுமாற்றப் பிரச்னை, பலருக்கு ஒரு “விசித்திரமான சூழ்நிலை” அல்ல. ஒருவரை அவருடைய முதற்பெயர், கடைசிப்பெயர், அல்லது இரண்டையும் கொண்டு அறிமுகம் செய்வதா என்ற குழப்பம் பெரும்பாலும் ஏற்படுவதை நீங்கள் உணரக்கூடும்; ஒரு சிறு முன்னுரையைப் பயன்படுத்துவதா (“இவர் என்னுடைய நண்பர், ______”); ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இரண்டு பேரை அறிமுகப்படுத்தும் கடமை நம்முடையதா இல்லையா என்பதைப் பற்றியும் கூட குழப்பம் ஏற்படும். ஆனால் நீங்கள் பெயர் மறந்து விட்ட ஒருவரை அறிமுகப்படுத்தும் தவிர்க்க முடியாத கெட்ட கனவைக் காட்டிலும் இவையாவும் கடுகளவு பிரச்னையே ஆகும்.
நீங்கள் ஒருவரை ஓரிரு முறை மட்டும் சந்தித்திருந்தால், அல்லது சிறிது காலத்துக்குப் பார்க்கவில்லை என்றால், அவருடைய பெயரை மறப்பதென்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் பெரும்பாலும் அது உங்களுக்கு உண்மையிலேயே தெரிந்திருக்க வேண்டிய ஒருவரின் பெயராக இருக்கும், மேலும் உங்களுக்குத் தெரியவில்லை என்பதை அறிந்தால் மனம் புண்படக்கூடியவராக இருக்கும். வேறொரு வகையில் சொன்னால், ஒரு தவறு இங்கே உருவாக்கப்படுகிறது.
இது நடைபெறும் பொழுது, நிச்சயமாக இது பெருந்துயரம் தான், நூற்றுக்கணக்கில் புழங்குகின்றவர்கள் பல்வேறு வகையில் இதனை எதிர்கொள்வதை நான் கவனித்திருக்கிறேன், பொங்குகிற மன்னிப்பிலிருந்து (“அடக்கடவுளே, நான் மிகவும் வருந்துகிறேன், ஐயோ, ஓ, உங்கள் பெயரை நான் மறந்து விட்டதை என்னால் நம்பவே முடியவில்லை!”) தங்கள் கைகளை விரித்துக் கொண்டு நடந்துச் சென்றுவிடுவது வரையில். ஆனால் இத்தகைய ஞாபக மறதியை எதிர்கொள்வதற்கு வேறு சிறந்த வழிகள் உள்ளன. அடுத்த முறை அறிமுகங்கள் செய்கின்ற பொழுது, நீங்கள் மறந்துப் போய் விட்டிருந்தால், இந்த வகையில் முயற்சிக்கவும்:
தங்களை தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ள கட்டாயப்படுத்துங்கள். இது தான் உங்கள் ஞாபக மறதியை மிக எளிதாகவும் மிகச் சிறப்பான முறையிலும் கையாள்வதற்கான வழியாகும். இது நல்ல முறையில் செய்யப்பட்டு விட்டதும், உங்களை யாருமே சந்தேகிக்க மாட்டார்கள். குழுவில் உள்ள ஒருவரது பெயரை நீங்கள் மறந்துப்போய் இருந்தால், முதலில் அந்த நண்பரை நோக்கிப் புன்னகை புரியவும். பிறகு பெயரை நீங்கள் நினைவில் வைத்திருக்கின்ற ஒருவரை அன்பொழுக நோக்கி இவ்வாறு சொல்லுங்கள், “இவர் லிண்டன் போண்ட்,” பிறகு சர்வசாதாரணமாக பெயரை மறந்து விட்ட நபரை நோக்கித் திரும்பவும். நீங்கள் இன்னமும் பெயர் குறிப்பிடாதவர் தானாகவே (இது இயல்பாக வரக்கூடியது) சொல்வார் “உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, லிண்டன், நான் சில்வியா கூப்பர்,” பிறகு பெரும்பாலும் கையை குலுக்குவதற்கு நீட்டுவார்.
English to Tamil: Fourth ProZ.com Translation Contest - Entry #2338
Source text - English When my wife told me she was pregnant, I got that stomach-churning sensation that hits you on a plunging roller coaster. I was excited, yes, but... oh my God. Parenting was for, well, parents.
So here I stand, bug-eyed and sweating buckets like some poorly-drawn cartoon character, the question marks floating in the air around my head while I try to prepare myself for the complete care and responsibility of another living being besides my cat. I'm responsible for making sure this little human doesn't grow up and turn into a complete monster. If the child turns out a social moron-- my fault. If the babe can't find Luxembourg on the map, blame me for not providing a better education. They'll need therapy, and of course that will be on my head too. So many opportunities for wrong turns!
I remember the day my father sat me down and awkwardly told me about the birds and the bees; it was perhaps the most excruciating and embarrassing half hour of both our lives. I can't do that to another human being.
Maybe I'm getting a little ahead of myself here. I can do this, I say; I'll be a great father. My child will be reared a well-rounded, educated, upstanding citizen of the world, and he or she won't hate me.
And then I imagine the baby, still safe within the confines of my wife's belly, suddenly opening an alarmed eye as the thought enters his or her mind: "What if my dad just can't hack it?
Translation - Tamil தான் கற்பமாக இருப்பதை என் மனைவி கூறிய போது, கீழ்நோக்கி பாய்ந்தோடுகின்ற ரோலர் கோஸ்டர் வண்டியில் போவது போன்ற வயிற்றைக் கலக்கும் ஓர் உணர்வு தான் எனக்கு ஏற்பட்டது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்னவோ உண்மை தான், ஆனால் ... அடக்கடவுளே! பிள்ளைகளை வளர்ப்பது என்பது பெற்றோர்கள் செய்வதாயிற்றே.
ஆகவே, இதோ வீங்கிய கண்களோடும் வியர்வையோடும் மோசமாக வரையப்பட்ட கார்ட்டூன் பாத்திரம் போன்று இப்பொழுது நின்றுக்கொண்டிருக்கிறேன். கேள்விக்குறிகள் என் தலையைச் சுற்றி பவனி வருகையில், எனது பூனையைத் தவிர்த்து மற்றொரு உயிருக்கு முழுமையான கவனிப்பு மற்றும் பொறுப்பை வழங்குவதற்கு என்னை நானே தயார்படுத்திக்கொள்ள முயன்று வருகிறேன். இந்தச் சிறு மனிதன் பெரியவனாகி ஒரு முழுமையான காட்டுமிராண்டியாக மாறாமல் இருப்பதற்கு நான் தானே பொறுப்பு. இந்தக் குழந்தை சமூகத்தில் ஒரு மடையனாக ஆகிவிட்டால் - அது எனது தவறு. அந்தக் குழந்தை லக்சம்பர்க் நாட்டை வரைபடத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், சிறப்பான கல்வியை வழங்கவில்லையென என் மீது தான் குற்றம் சாட்டப்படும். அவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை தேவைப்படலாம், நிச்சயமாக அதுவும் என் தலைமீது தான் விழும். தவறான திருப்பங்கள் ஏற்படுவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள்!
என் தந்தை என்னை தன் பக்கத்தில் அமரச் செய்து பாலியல் விஷயத்தைக் கூறுகையில் சுற்றி வளைத்து குருவிகள் மற்றும் குழவிகள் கதையை தடுமாற்றத்தோடு சொல்லத் தொடங்கிய நாளை நான் இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்; அது தான் எங்கள் இருவரின் வாழ்நாளிலேயே மிகவும் தர்மசங்கடமான அரைமணி நேரமாகும். அதையே இன்னொரு மனிதப் பிறவிக்கும் செய்ய என்னால் இயலாது.
ஒருவேளை நான் மிகவேகமாக முன்னோக்கிச் செல்கிறேன் போலிருக்கிறது. இல்லை, இதை என்னால் செய்ய இயலும், நானே எனக்குக் கூறிக்கொள்கிறேன்; நான் ஒரு சிறந்த தந்தையாக இருப்பேன். என் பிள்ளை எல்லாம் தெரிந்த, கல்வி அறிவுள்ள, உலகின் சிறந்த குடிமகனாக வளர்க்கப்படுவான், அவனோ அல்லது அவளோ என்னை வெறுக்க மாட்டார்கள்.
ஆனாலும் திடீரென ஓர் எண்ணம், எனது மனைவியின் வயிற்றின் பாதுகாப்பான சூழலில் இன்னமும் இருக்கின்ற என் குழந்தையின் மனதில் “எனது தந்தையால் இதைச் செய்ய முடியாவிட்டால் என்னாவது?” என்ற எண்ணம் ஏற்பட்டு அவனோ அல்லது அவளோ திடீரென தடுமாற்றத்துடன் ஒரு கண்ணை விழித்துப் பார்ப்பதை நான் உருவகப்படுத்திப் பார்க்கிறேன்.
More
Less
Experience
Years of experience: 21. Registered at ProZ.com: Aug 2006.