This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
Affiliations
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
Services
Translation, Subtitling, Transcription
Expertise
Works in:
Physics
Rates
Portfolio
Sample translations submitted: 1
English to Tamil: A Brief History of Time
Source text - English A Brief History of Time
Stephen Hawking
CHAPTER 1
OUR PICTURE OF THE UNIVERSE
A well-known scientist (some say it was Bertrand Russell) once gave a public lecture on astronomy. He
described how the earth orbits around the sun and how the sun, in turn, orbits around the center of a vast
collection of stars called our galaxy. At the end of the lecture, a little old lady at the back of the room got up and
said: “What you have told us is rubbish. The world is really a flat plate supported on the back of a giant
tortoise.” The scientist gave a superior smile before replying, “What is the tortoise standing on.” “You’re very
clever, young man, very clever,” said the old lady. “But it’s turtles all the way down!”
Most people would find the picture of our universe as an infinite tower of tortoises rather ridiculous, but why do
we think we know better? What do we know about the universe, and how do we know it? Where did the
universe come from, and where is it going? Did the universe have a beginning, and if so, what happened before
then? What is the nature of time? Will it ever come to an end? Can we go back in time? Recent breakthroughs
in physics, made possible in part by fantastic new technologies, suggest answers to some of these
longstanding questions. Someday these answers may seem as obvious to us as the earth orbiting the sun – or
perhaps as ridiculous as a tower of tortoises. Only time (whatever that may be) will tell.
As long ago as 340 BC the Greek philosopher Aristotle, in his book On the Heavens, was able to put forward
two good arguments for believing that the earth was a round sphere rather than a Hat plate. First, he realized
that eclipses of the moon were caused by the earth coming between the sun and the moon. The earth’s
shadow on the moon was always round, which would be true only if the earth was spherical. If the earth had
been a flat disk, the shadow would have been elongated and elliptical, unless the eclipse always occurred at a
time when the sun was directly under the center of the disk. Second, the Greeks knew from their travels that
the North Star appeared lower in the sky when viewed in the south than it did in more northerly regions. (Since
the North Star lies over the North Pole, it appears to be directly above an observer at the North Pole, but to
someone looking from the equator, it appears to lie just at the horizon. From the difference in the apparent
position of the North Star in Egypt and Greece, Aristotle even quoted an estimate that the distance around the
earth was 400,000 stadia. It is not known exactly what length a stadium was, but it may have been about 200
yards, which would make Aristotle’s estimate about twice the currently accepted figure. The Greeks even had a
third argument that the earth must be round, for why else does one first see the sails of a ship coming over the
horizon, and only later see the hull?
Translation - Tamil காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்
ஸ்டீஃபன் ஹாக்கிங்
அதிகாரம் 1
அண்டச் சித்திரம்
யாவரும் அறிந்த அறிவியலர் ஒருவர் (பெட்ரன்ட் ரசல் என்பார் சிலர்) ஒரு முறை வானியல் குறித்துப் பொது விரிவுரையாற்றினார். புவி சூரியனைச் சுற்றி வருவது எப்படி? சூரியனோ நமது திரள் எனப்படும் பென்னம்பெரிய விண்மீன் கூட்டத்தின் மையத்தைச் சுற்றி வருவது எப்படி? என்றெல்லாம் அவர் விரிவாக எடுத்துரைத்தார். விரிவுரை முடிவுற்றவுடன், பின் வரிசையிலிருந்து உருச்சிறுத்த மூதாட்டி ஒருத்தி எழுந்து சொன்னாள்: "நீர் எங்களுக்குச் சொல்லியிருப்பது எல்லாம் வெறும் குப்பை. உண்மையில் உலகம் இராட்சச ஆமை ஒன்றின் முதுகில் சாய்ந்திருக்கும் தட்டையான தட்டே ஆகும்." அறிவியலாளர் நக்கலாகச் சிரித்து விட்டு விடையளித்தார்: "ஆமை எதன் மீதம்மா நிற்கிறது?" அதற்கு அம்மூதாட்டி சொன்னாள்: "இளைஞரே, நீங்கள் கெட்டிக்காரர்தான்! பெரிய கெட்டிக்காரர்தான்! ஆமையின் கீழ் ஆமை எனக் கடைசி வரை ஆமைதான்!"
நமது அண்டத்தை ஈறிலா ஆமைகளின் கோபுரமாகப் படம்பிடித்துக் காட்டுவதைப் பெரும்பாலானவர்கள் கேலிக்குரியதாகவே கருதுவார்கள். ஆனால் நாம் இதை விடவும் அதிகம் தெரிந்தவர்கள் எனக் கருதிக் கொள்வது ஏன்? நமக்கு அண்டத்தைப் பற்றி என்ன தெரியும்? எப்படித் தெரியும்? அண்டம் எங்கிருந்து வந்தது? எங்கே சென்று கொண்டிருக்கிறது? அண்டத்துக்குத் தொடக்கம் என்ற ஒன்று இருந்ததா? அப்படி ஒன்று இருந்திருந்தால் அதற்கு முன்னால் நடந்தது என்ன? காலத்தின் தன்மை என்ன? அது எப்போதாவது முற்றுப் பெறுமா? நாம் காலத்தில் பின்னோக்கிச் செல்ல முடியுமா? அதியற்புதமான புதிய தொழில்நுட்பங்களால் ஓரளவு சாத்தியமாகியுள்ள அண்மைக் காலத்திய இயற்பியல் துறை முன்னேற்றங்கள் வெகுநாளாய் விடை காணப்படாத இந்த வினாக்கள் சிலவற்றுக்கு விடைகளாகின்றன. பின்னொரு காலத்தில் இந்த விடைகள் புவி சூரியனைச் சுற்றி வருவது போல் நமக்குக் கண்கூடானவையாகத் தோன்றலாம். அல்லது ஒருவேளை ஆமைகளின் கோபுரம் என்பது போல் கேலிக்குரியவையாகவும் தோன்றலாம். காலம்தான் (காலம் என்பது என்னவாயிருந்த போதிலும்) இதற்கு விடை சொல்ல வேண்டும்.
கிமு 340இலேயே கிரேக்க மெய்யியலாளர் அரிஸ்டாட்டில் அவர்களால் விண்ணுலகு [On The Heavens] என்கிற அவரது நூலில் புவி தட்டையான தட்டையாக இருப்பதைக் காட்டிலும் வட்டமான உருண்டையாக இருப்பதை நம்புவதற்கு இரு நல்ல வாதங்களை எடுத்து வைக்க முடிந்தது. முதலாவதாக, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே புவி வருவதால்தான் நிலா-மறைப்புகள் ஏற்படுகின்றன என்பதை அவர் உணர்ந்தார். நிலவின் மீது புவியின் நிழல் எப்போதும் வட்டமாகவே இருக்கக் கண்டார். புவி உருண்டையாக இருந்தால் மட்டுமே இப்படி நிகழும். புவி தட்டையான வட்டமாக இருக்குமானால் மறைப்பு நிகழும் போதெல்லாம் இந்நிழல் நீண்டொடுங்கியதாகவும் நீள்வட்டமாகவும் இருந்திருக்கும். வட்டின் மையத்துக்கு நேர் கீழே சூரியன் இருப்பதாகக் கொண்டால் மட்டுமே நிழல் இப்படி இருக்காது. இரண்டாவதாக, வட விண்மீன் வடக்கத்திய வட்டாரங்களில் பார்க்கும் போது தெரிவதைக் காட்டிலும் தெற்கில் பார்க்கும் போது வானில் இன்னும் கீழே தெரிகிறது என்பதை கிரேக்கர்கள் தங்கள் பயணங்களிலிருந்து தெரிந்து வைத்திருந்தார்கள். (வட விண்மீன் வட துருவத்துக்கு மேல் இருப்பதால் வட துருவத்திலிருந்து நோக்குகிறவருக்கு அது தலைக்கு நேர் மேலாகவும், நிலநடுக் கோட்டிலிருந்து நோக்குகிறவருக்கு அது சரியாத் தொடுவானத்திலும் இருப்பதாகத் தெரியும்.)
வட விண்மீன் இருப்பதாகத் தெரியும் நிலையில் எகிப்துக்கும் கிரேக்கத்துக்கும் இடையே காணப்படும் வேறுபாட்டைக் கொண்டு அரிஸ்டாட்டில் புவியைச் சுற்றிய தொலைவைக் கூட 4,00,000 ஸ்டேடியம்கள் என மதிப்பீடு செய்தார். ஒரு ஸ்டேடியம் என்பதன் நீளம் என்னவென்று துல்லியமாகத் தெரியவில்லை. அது சுமார் 200 கஜமாக இருந்திருக்கலாம். அதாவது அரிஸ்டாட்டிலின் மதிப்பீடு நடப்பில் ஏற்கப்பட்டிருக்கும் அளவைப் போல் இரு மடங்கு என்றாகும். புவி உருண்டையாகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கு கிரேக்கர்கள் மூன்றாவதாக ஒரு வாதமும் வைத்திருந்தனர்: "புவி கோள வடிவம் இல்லை என்றால், தொடுவானத்திலிருந்து வரும் கப்பலைப் பார்க்கும் போது முதலில் அதன் பாய்மரங்களும் பிறகுதான் அதன் அடிப்பாகமும் தெரிகின்றனவே, இதற்கு வேறு என்னதான் காரணம்?"
More
Less
Experience
Years of experience: 12. Registered at ProZ.com: Jun 2012.